Tuesday, 28 July 2020

கலிங்கத்துப் பரணி - கடைதிறப்பு - நான்காவது அத்தியாயம்


கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர் சயங்கொண்டார் ஆவார் 'பரணிக்கு ஓர் சயங்கொண்டான்' என்று பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இவரைப் பாராட்டி உள்ளார். இவரது இயற்பெயரை அறிய முடியவில்லை. புலவர் பலரும் சொற்போர் நிகழ்த்துவது வழக்கம். இத்தகு சொற்போரில் வென்றதால் இவருக்குச் சயங்கொண்டார் என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பர். இவருடைய ஊர் தீபங் குடி.




  • குலோத்துங்கனும் சயங்கொண்டாரும்
குலோத்துங்கன் கலிங்கத்துப் போரில் வெற்றி பெற்றான். வெற்றிக்குப் பின்பு சயங்கொண்டாரோடு உரையாடிக் கொண்டிருந்தான். அப்போது புலவரை நோக்கி, 'புலவரே! கலிங்கத்தைச் சயங்கொண்டமையால் நானும் சயங்கொண்டான் ஆயினேன்' என்று கூறினான். இதனைக் கேட்ட சயங்கொண்டார் உளம் மகிழ்ந்தார்.
'அப்படி ஆனால் சயங்கொண்டானைச் சயங்கொண்டான் பாடுவது மிகப் பொருத்தம்' என்று கூறிக் கலிங்கத்துப் பரணியைப் பாடினார் என்பர்

  • கலிங்கத்துப் பரணியும் பொன் தேங்காயும்
சயங்கொண்டார் பரணி பாடி முடித்தார். பின்பு குலோத்துங்கன் அவையில் அரங்கேற்றம் செய்யத் தொடங்கினார். அந்தக் காலத்தில் ஒருவர் நூல் செய்தால் பலர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்ய வேண்டும்; பலரின் ஒப்புதலைப் பெற வேண்டும். இம்மரபினைத் தொல்காப்பிய அரங்கேற்றத்தில் இருந்தே காண்கிறோம்.
அரங்கேற்றம் செய்யும் காலத்தில் அரசர்கள் புலவர்களுக்குப் பரிசு அளித்துப் பாராட்டுவர். சயங்கொண்டார் பாடலைக் குலோத்துங்கன் சுவைத்தான்; ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பொன்னால் ஆகிய தேங்காயை உருட்டிக் கவிஞரையும் நூலையும் சிறப்புச் செய்தான்.

  • சயங்கொண்டார் நூல்கள்
சயங்கொண்டார் புகார் நகரத்து வணிகரைப் புகழ்ந்து 'இசை ஆயிரம்' என்ற நூலைப் பாடி உள்ளார். விழுப்பரையர் மீது 'உலாமடல்' என்ற நூலையும் இயற்றி உள்ளதாகத் தெரிகிறது.
1.2.2 பாட்டுடைத் தலைவன்

கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத் தலைவன் முதல் குலோத்துங்க சோழன். இவன் இராசேந்திர சோழன் மகள் சோழ இளவரசி அம்மங்கைக்கும் சாளுக்கியர் குல இராசராச நரேந்திரனுக்கும் பிறந்தவன். இவன் மாமன் வீரராசேந்திர சோழன் இறந்த பின்பு அவன் மகன் அதிராசேந்திரன் பட்டம் ஏற்றான். இவனும் சில திங்களில் இறந்தான். சோழ நாடு வாரிசு இல்லாமல் குழப்பத்தில் ஆழ்ந்தது. குழப்பத்தை நீக்கச் சாளுக்கியர் குலத்தைச் சேர்ந்த குலோத்துங்கன் பட்டம் ஏற்றான்.  ( தொடரும்)
                      நன்றி...-முனைவர் - திரு சிலம்பு நா. செல்வராசு & கூகிள்

கலிங்கத்துப் பரணி - கடைதிறப்பு - எட்டாவது அத்தியாயம்

                                         செருக்களம் சென்ற தன் கணவனைத் தேடிச் சென்றப்  பெண், அம்பொன்று நெஞ்சில் பாய்ந்து அவன் இறந்து கொண்டிரு...